முதலிடத்தில் இந்தியா கோல்கத்தா: டெஸ்ட் கிரிக்கெட்

போட்டியின் இரண்டாவது ஆட்டத் திலும் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தானைப் பின் னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டி யலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இவ்விரு அணிகளும் மோதிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நேற்று கோல்கத்தாவில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 316 ஓட்டங்களைக் குவித்தது. முதல் இன்னிங்சில் 204 ஓட்டங் களில் சுருண்டது நியூசிலாந்து. 112 ஓட்டங்கள் முன்னிலை யுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 3வது நாள் ஆட் டத்தின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி 76.5 ஓவர்களில் 263 ஓட்டங் களுக்கு ஆட்டமிழந்தது. 376 ஓட்டங்கள் என்ற இலக்குடன் 2வது இன்னிங்சைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஜோடி டாம் லாதம்- கப்தில் ஜோடி நல்ல தொடக்கத்தை அளித்தது. கப்தில் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் லாதம் சிறப்பாக விளையாடி 74 ஓட்டங்கள் குவித்தார். இடையில் நிக்கோல்ஸ் 24 ஓட்டங்களும் டெய்லர் 4 ஓட்டங்களும் எடுத்தனர். 156 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணி தடுமாறியது.

நியூசிலாந்து அணித் தலைவர் டெய்லரின் விக்கெட்டைக் கைப்பற்றிய வெற்றியை சக வீரர்களுடன் கொண்டாடும் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை