போட்டிகள் ரத்து என மிரட்டிய பிசிசிஐ; பின்வாங்கிய லோதா குழு

புதுடெல்லி: இந்­தி­யக் கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தின் வங்­கிக்­ க­ணக்­கு ­களை முடக்­க­வில்லை, மாநில கிரிக்­கெட் வாரி­யங்கள் தொடர்­புடைய இரண்டு பரி­வர்த்­தனை­களை மட்டுமே நிறுத்­துமாறு வங்கிகளுக்கு அறி வுறுத்தப்பட்டதாக லோதா குழு விளக்­கம் அளித்­துள்­ளது. முன்­ன­தாக பிசி­சிஐ­யின் செயல்­பாடு, நிர்­வா­கத்­தில் சில சீர்­தி­ருத்­தங்களைப் பரிந்­துரை செய்த லோதா குழு அதனை அமல்­படுத்த உச்ச நீதி­மன்ற உத்­த­ரவை­யும் பெற்றது. ஆனால் பிசிசிஐ இன்னமும் பரிந்­துரை­களை அமல்­படுத்­தவில்லை. இந்நிலையில், கடந்த செப்­டம்பர் 30ஆம் தேதி நடை­பெற்ற சிறப்­புப் பொதுக்­கூட்­டத்­தில் மாநில வாரி­யங்களுக்கு நிதி­ய­ளிக்­கு­மாறு வங்­கிகளுக்கு அறி ­வு­றுத்தி இந்திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரியம் எனப்­படும் பிசிசிஐ முடி­வெ­டுத்­தது. இது லோதா குழுவின் பரிந்­துரைக்கு எதி­ரா­னது என்­ப­தால், மாநில வாரி­யங்களுக்­குப் பெரிய தொகையைக் கைமாற்ற வேண்டாம் என்று பிசிசிஐ கணக்கு வைத்­தி­ருக்­கும் வங்­கிகளுக்கு என்று லோதா குழு மின்னஞ்சல் மூலம் அறி­வு­றுத்­தி­யி­ருந்தது. ஏனெனில் அது உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வு­களை மீறி­ய­தா­கும் என வங்­கிகளை அது எச்­ச­ரித்­தது.

இதனை­ய­டுத்­து பிசி­சிஐ­யின் வங்­கிக்­க­ணக்­கு­கள் முடக்­கப்­பட்­ட­தாக செய்­தி­கள் எழுந்தன. வங்கிக் கணக்­கு­களை லோதா குழு முடக்­கி­ய­தாக கருதிய பிசிசிஐ, நியூ­சி­லாந்­துக்கு எதிரான நடப்­புத் தொடரை மட்­டு­மல்­லா­மல் அனைத்து உள்ளுர், அனைத்­து­லக போட்­டி­களை­யும் ரத்து செய்­வ­தாக மிரட்­டி­யது. “போட்­டி­களை நடத்த வாரி­யத்­திற்கு நிதி தேவை. இது இப்­ப­டித்­தான் போகும் என்றால் நடப்பு நியூ­சி­லாந்து தொடரை ரத்து செய்­வதைத் தவிர வேறு வழி­யில்லை,” என்று வாரியம் கூறியதாகத் செய்திகள் தெரிவிக் கின்றன. இதனை­ய­டுத்து விளக்­கம் அளித்த குழுத் தலைவர் லோதா, “பிசிசிஐ வங்கிக் கணக்­கு­களை முடக்­க­வில்லை. பிசிசிஐ சிறப்புக் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது போல் மாநில கிரிக்­கெட் வாரி­யங்களுக்­குப் பெரிய தொகைகளை அளிக்க வேண்டாம் என்று அறி­வு­றுத்­தி­யி­ருந்­தோம். வழக்­க­மான செல­வு­களுக்கு எந்தவித தடையும் இல்லை,” என்றார்.