இளையர் அணி காற்பந்து பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி

சிங்கப்பூர் காற்பந்துப் பிரபலம் ஃபாண்டி அகமது, 54, சிங்கப்பூர் காற்பந்துச் சங்க இளையர் அணியின் தலைமை பயிற்றுவிப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் துணைத் தலைவர் எட்வின் தோங் இதனை அறிவித் தார். 2018 ஆசிய விளையாட்டு, 2019 மற்றும் 2021 தென்கிழக் காசிய விளையாட்டு, தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி ஆகிய வற்றுக்கான இளையர் காற்பந்து அணியை அவர் வழிநடத்துவார்.

சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் களில் ஒருவராக இருக்கும் ஃபாண்டியின் தற்போதைய ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. கடந்த 2003 முதல் 2006ஆம் ஆண்டு வரை யங் லயன்-ஸ் குழுவிற்கும் 23 வயதுக்குட்பட் டோருக்கான தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தார் ஃபாண்டி. இவரின் வழிகாட்டு தலில் எஸ் லீக் போட்டிகளில் இருமுறை மூன்றாவது இடத்தைப் பிடித்தது யங் லயன்ஸ் அணி. அதன்பிறகு 2013ஆம் ஆண்டு சங்கத்தில் மீண்டும் சேர்ந்த ஃபாண்டி, லயன்ஸ்XII அணியின் பயிற்றுவிப்பாளரானார். அவரின் வழிகாட்டுதலில் லயன்ஸ்XII குழு கடந்த ஆண்டு மலேசிய எஃப்ஏ கிண்ணத்தை வென்றது.

சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் எட்வின் தோங்குடன் (இடது) இளையர் அணி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஃபாண்டி அகமது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யர்கன் கிளோப். படம்: இபிஏ

13 Nov 2019

யர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே