136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாக். வெற்றி

அபுதாபி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் பாகிஸ்தான் கைப் பற்றியுள்ளது. பூவா தலையாவில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது. அந்த அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது. பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து மூன்று ஒருநாள் ஆட்டங்களில் அவர் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மூன்றாவது ஆட்டத்தில் அவர் 117 ஓட்டங்கள் குவித்தார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் 120 ஓட்டங்களும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 123 ஓட்டங்களும் எடுத்து இருந்தார். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து மூன்று சதங்களை எடுத்த எட்டாவது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். இதேபோல் தொடக்க வீரரும் அணித் தலைவருமான அசார் அலியும் சதம் அடித்தார். அவர் 101 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஓவர்களில் 172 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் எடுத்ததை அடுத்து தமது சக வீரருடன் கொண்டாடும் பாகிஸ்தானின் பந்தடிப்பாளர் பாபர் ஆசம் (வலது). படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்