லயன்ஸ் சிறக்கவேண்டும்: சுந்தரத்தின் பிறந்தநாள் ஆசை

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் இடைக்காலப் பயிற்று விப்பாளரும் முன்னாள் காற்பந்து நட்சத்திரமுமான வி. சுந்தர மூர்த்திக்கு நேற்றுப் பிறந்தநாள். அவருக்கு 51 வயது. ‘காஸ்வே சேலஞ்ச்’ காற் பந்துப் போட்டிக்கு முன்பு நேற்று அமாரா ஹோட்டலில் செய்தி யாளர் கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர் கூட்டம் முடிந்ததும் கேக் கொண்டு வரப்பட்டது. தமக்காக ஏற்பாடு செய்திருந்த இந்த இன்ப அதிர்ச்சியைக் கண்டு முகம் மலர்ந்த சுந்தரம் கேக் வெட்டி மகிழ்ந்தார். “சிங்கப்பூர் காற்பந்துக் குழு வெற்றிகளைக் குவிக்க நான் உதவி செய்யவேண்டும் என்பதே எனது பிறந்தநாள் ஆசை. அதுதான் முக்கியம்,” என்று சுந்தரம் தெரிவித்தார்.

பிறந்தநாள் கேக்கை முகம் மலர மகிழ்ச்சியுடன் வெட்டும் வி. சுந்தரமூர்த்தி. படம்: பெரித்தா ஹரியான்

Loading...
Load next