சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ‘காஸ்வே சேலஞ்ச்’ காற்பந்துப் போட்டி

இன்றிரவு 8.30 மணிக்கு தேசிய விளையாட்டரங்கத்தில் நடை பெறும் ‘காஸ்வே சேலஞ்ச்’ காற்பந்துப் போட்டியில் சிங்கப் பூரும் மலேசியாவும் மோதுகின்றன. இது ஒரு நட்புமுறை ஆட்டம் என்றபோதிலும் இதில் வெற்றி பெறவேண்டும் என்று இரு குழுக்களும் முனைப்புடன் இருக் கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விளை யாட்டரங்கத்தில் நடைபெற்ற சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மலேசியாவிடம் சிங்கப்பூர் 3-1 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளி யேறியது. சமநிலை கண்டால் போதும், அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சிங்கப் பூருக்குச் சாதகமாக இருந்தது. ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது நிலைமை தலைகீழாக மாறியது. எதிர்பாராத வகையில் இரண்டு கோல்களை விட்டு சிங்கப்பூர் தோல்வி அடைந்தது.

அந்தக் கசப்பான அனுபவம் சிங்கப்பூர் வீரர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமைந்ததாகவும் அப்போது இருந்ததைவிட சிங்கப்பூர் குழு இன்னும் வலிமை மிக்கதாக உருவெடுத்துள்ளது என்றும் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருண் தெரிவித்தார். இன்றைய ஆட்டத்தில் சிங்கப் பூர் அணிக்கு மேலும் வலு சேர்க்க அனுபவமிக்க வீரர்களான டேனி யல் பெனட்டையும் முஸ்தாஃபிக் ஃபஹ்ருதீனையும் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி சேர்த்துள்ளார். இந்நிலையில், மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வேண்டும் என்ற பேரவாவுடன் சிங்கப்பூர் வீரர்கள் பயிற்சியின் போது சிறப்பாகச் செயல்பட்டு வந்ததாக சுந்தரம் தெரிவித்தார். முதல் 11 ஆட்டக்காரர்களில் ஒரு வராக இடம்பெறவேண்டும் என்ற நோக்குடன் அவர்கள் போட்டி யிட்டு விளையாடி வந்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தியும் (இடக்கோடி) அணித் தலைவர் ஹாரிஸ் ஹருணும் (இடமிருந்து இரண்டாவது) அமாரா ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மலேசியக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஓங் கிம் சுவீ (வலக்கோடி), மலேசிய அணித் தலைவர் அம்ரி யாஹ்யா ஆகியோருடன் கைகுலுக்கினர். படம்: பெரித்தா ஹரியான்