நீச்சல் வீரர்களுக்கு தேசிய தின விருது

சிங்கப்பூரின் நீச்சல் நட்சத்திரங்களான ஜோசஃப் ஸ்கூலிங்குக்கும் திரேசா கோவுக்கும் தேசிய தின விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் பங்கெடுத்த ஸ்கூலிங் தங்கம் வென்றார். அதுமட்டுமல்லாது, புதிய ஒலிம்பிக் சாதனை நேரத்தையும் படைத்தார். அவருக்கு மெச்சத்தக்க சேவை விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) சிங்கப்பூருக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற யிப் பின் சியூ, 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றபோது இந்த மெச்சத் தக்க சேவை விருதைப் பெற்றார். பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற திரேசா கோவுக்குப் பொதுச் சேவை நட்சத்திர விருது வழங்கப் படும். அவர் ஏற்கெனவே பொதுச் சேவை விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. விருதுகளை அடுத்த மாதம் தேசிய தின விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்குவார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்