லயன்ஸ் ஆட்டத்தில் திருப்தியடைந்த சுந்தரம்

நேற்றிரவு நடைபெற்ற ‘காஸ்வே சேலஞ்ச்’ காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூரும் மலேசியாவும் கோல் ஏதும் போடாமல் சமநிலை கண்டன. ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பூர் குழு, கோல் போட பல பொன்னான வாய்ப்பு களைத் தவறவிட்டது. இதனால் இந்த நட்புமுறை ஆட்டத்தை நேரில் காண தேசிய விளையாட்டரங்கத்தில் திரண்ட கிட்டத்தட்ட 25,000 ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் சிங்கப்பூர் வீரர்களின் செயல்பாடு குறித்து தாம் திருப்தி அடைந்திருப் பதாகப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி தெரிவித்தார். ஆட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது குறித்து இரு குழுக்களின் பயிற்றுவிப்பாளர் களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சுந்தரத்தைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் குழுவின் இடைக்காலப் பயிற்சிவிப்பாளராக அவர் பொறுப்பேற்றதிலிந்து நேற்றைய ஆட்டம்தான் அக்குழுவின் ஆகச் சிறந்த ஆட்டமாகும். வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பு, தற்காப்பில் கட்டொ ழுங்கு, அதிரடித் தாக்குதல்கள், பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற உயர்தரக் குணாதிசயங்களை சிங்கப்பூர் வீரர்கள் கொண்டிருந்தனர் என்று சுந்தரம் பெருமையுடன் கூறினார். ஆனால் கோல் போட முடியாமல் போனதுதான் ஒரே ஒரு குறை என்று அவர் ஒப்புக் கொண்டார்.

ஆனால் தமது ஆட்டக்காரர் களை அவர் குறைகூறவில்லை. கோல் போட அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என்ற சுந்தரம், சிங்கப்பூர் வீரர்கள் வலை நோக்கி அனுப்பிய பந்து பலமுறை மலேசியாவின் கோல் கம்பம் மீது பட்டு வெளியானதைச் சுட்டினார். அதுமட்டுமல்லாது, கிடைக்க வேண்டிய பெனால்டி வாய்ப்பை நடுவர் கொடுக்காததைப் பற்றியும் அவர் மறக்காது கூறினார். சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தயாராகும் சிங்கப்பூர் குழுவுக்கு இந்த ஆட்டம் உத் வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது என்பதில் ஐய மில்லை. இதையே தமது பிறந்தநாள் பரிசாக சுந்தரம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்