இரட்டை சதமடித்த கோஹ்லி சாதனை

இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் கோஹ்லி இரட்டை சதமடித்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டாவது இரட்டை சதம் போட்டு அசத்தியுள்ளார் அவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை இரட்டை சதம் அடித்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது இரட்டை சதமடித்த கோஹ்லிக்கு அது முதல் இரட்டை சதமாக அமைந்தது.

இந்த நிலையில் நியூசிலாந் துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் போட்டியிலும் அவர் இரட்டை சதம் அடித்துள்ளார். 347 பந்துகளைச் சந்தித்த அவர் இரட்டை சதமடித்தார். இதுதவிர கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 முறை சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 25 சதம் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவரது சதங்களின் எண்ணிக்கை 4 ஆகும். ஆனால், அனைத்துலக டி20 போட்டிகளில் மட்டும் இதுவரை அவர் சதம் விளாசியது இல்லை. கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ரகானேவும் 188 ஓட்டங்களை எட்டினார். தொடக்கம் முதலே இருவரும் சீரான வேகத்தில் ஓட்டங்களைச் சேர்த்து விளையாடினர்.

இந்திய அணித் தலைவர் கோஹ்லியும் ரகானேவும் 365 ஓட்டங்களைக் குவித்து நான்காவது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!