இத்தாலியை தோல்வியில் இருந்து மீட்ட சீரோ

ஸ்கோபியா: உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்பந்தாட்டம் ஒன்றில் தோல்வியின் விளிம்பு வரை சென்ற இத்தாலி அணியை மீட்டார் சீரோ இம்மொபைல். கடைசி 15 நிமிடத்தில் அவர் போட்ட இரண்டு கோல்கள் இத்தாலியை மோசமான தோல்வி யில் இருந்து மீட்டு, மேசடோனியா அணியை 3=2 என்ற கோல் கணக்கில் வெல்ல செய்தது. ஆட்டம் தொடங்கிய 24வது நிமிடத்தில் இத்தாலியின் ஆண்ட்ரே பெலோட்டி முதல் கோலைப் போட்டார்.

பிற்பாதி ஆட்டத்தின் போது 57வது நிமிடத்தில் மேசடோனியா வின் இலிஜா நெஸ்டோரோவ்ஸ்கி தன் அணிக்கான முதல் கோலைப் போட்டு சமன் செய்தார். அடுத்த மூன்று நிமிடங்களில் மற்றொரு கோலைப் போட 2=1 என மேசடோனியா அணி முன்னிலைப் பெற்றது. எதிரணி அடுத்தடுத்து கோல் களைப் போட, நீண்ட நேரமாக அடுத்த கோலைப் போடாத இத்தாலி மோசமான தோல் வியைத்தான் சந்திக்கப் போகிறது என விமர்சனங்கள் எழத் தொடங் கின. இந்நிலையில், தனது அணியை தோல்வியின் அவமானத்தில் இருந்து மீட்டார் சீரோ இம்மொபைல். 75வது நிமிடத்தில் இரண் டாவது கோலையும் காயம் பட்ட தற்கான கூடுதல் நேரத்தின்போது மற்றொரு கோலையும் போட்டார் அவர். மேலும் யூரோ, உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டி களில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்நது வெற்றி பெற்று வரும் இத்தாலி இப்போதும் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேசடோனியாவின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அந்த அணியை வீழ்த்தியது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி