அஸ்வின் பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து

இந்தூர்: மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வினின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 557 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வ தாக இந்தியா அறிவித்தது. இதைத் தொடர்ந்து பந் தடிக்கத் தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கப்திலும் லேதமும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். இதனால் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 118 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், கப்டில் 72 ஓட்டங் களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் லேதம் (53), வில்லியம்ஸ் (8), டெய்லர் (0), ரொன்சி (0), நீசம் (71) ஆகியோர் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அஸ்வின் பந்துவீச்சில் நிலை தடுமாறிய நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்குச் சுருண்டது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்