பொங்கியெழுந்த போக்பா

ஆம்ஸ்டர்டாம்: காற்பந்து உலகில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட விளையாட்டாளரான பிரான்சின் பால் போக்பா கோல் கம்பத்துக்குத் தொலை தூரத்தில் இருந்து அடித்த பந்து வளைந்து நெளிந்து கோல் வலைக்குள் சென்றதால் நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று காற்பந்தாட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வெற்றி கொண்டது. ஆட்டத்தின் 30வது நிமிடத் தில் திடலின் மத்திய பகுதிக்கும் நெதர்லாந்து பெனால்டி எல்லைக் கும் இடைப்பட்ட தூரத்தில் கிடைத்த பந்தை பால் போக்பா கோலாக்கினார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்திற்கான 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்த பிரான்ஸ், 2018ல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் பங்கேற் பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று அதிகாலை நடந்த மற்றோர் ஆட்டத்தில் போர்ச்சுகல் 6=0 என்ற கோல் கணக்கில் ஃபாரோ ஐலண்ட்ஸ் குழுவைப் புரட்டியெடுத்தது. போர்ச்சுகலின் ஆண்ட்ரே சில்வா மூன்று கோல்கள் போட்டு அசத்தினார். நட்சத்திர வீரர் ரொனால்டோவும் தன் பங்குக்கு ஒரு கோல் போட, போர்ச்சுகல் 'பி' பிரிவில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!