மேத்யூ தாண்டவமாடியதில் 1.4 மி. மக்கள் தவிப்பு

ஜெரோமி: மேத்யூ கடும் புயலில் புரட்டிப்போடப்பட்ட ஹெய்ட்டிக்கு அனைத்துலக சமூகத்திடமிருந்து பெரிய அளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. சுமார் 1.4 மில்லியன் மக்களுக்கு அவரசகால உதவி தேவை என்று ஐநா தலைமை குறிப்பிட்டது. கடந்த வாரம் மேத்யூ புயல் ஹெய்ட்டியை நோக்கி வீசியது. இதில் குறைந்தது 372 பேர் கொல்லப்பட்டனர். முன்பு எட்ட முடியாத இடங்களையும் தற்போது மீட்புப் பணியாளர்கள் நெருங்கியிருப் பதால் இறந்தவர்களின் எண் ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

மேத்யூ தாண்டவத்தில் வீடுகள் தரை மட்டமாகின. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. கால்நடைகள் கொல்லப்பட்டன. இந்த நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் ஹெய்ட்டியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 120 மில்லியன் டாலர் நிவாரண உதவிக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கட் கிழமை விடுத்த அறைகூவலில் ஹெய்ட்டிக்கு பெருமளவில் உதவி தேவைப்படுகிறது என்று தலைமை செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டார். “வரை படத்தில் காண முடியாத அளவுக்கு சில கிராமங் களும் நகரங்களும் அழிந்து விட்டன,” என்றார் அவர். இம்மாதம் 4ஆம் தேதி மேத்யூ புயல் மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளையும் தாக்கியது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யர்கன் கிளோப். படம்: இபிஏ

13 Nov 2019

யர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே