‘கைகொடுக்காத மாற்றங்கள்’

ஹாங்காங்கிற்கு எதிரான அனைத்துலக நட்பு முறை ஆட்டத்தில் லயன்ஸ் குழு 2-0 எனத் தோல்வியடைந்தது. நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் ஃபாண்டி அகமதின் மூத்த மகன் இர்ஃபான் ஃபாண்டி புதுமுக வீரராக களமிறக்கப்பட்டார். லயன்ஸ் குழுவின் காற்பந்து பயிற்றுவிப்பாளர் சுந்தரமூர்த்தி அணியில் பல மாற்றங்களைச் செய்தபோதும் அவை வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. அனைத்துலக ஆட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக லயன்ஸ் குழு தோல்வியைத் தழுவியது.

கடைசியாக கடந்த ஜூன் மாதம் மியன்மாருக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் லயன்ஸ் குழு வெற்றி பெற்றது. அதுபோல் கடந்த மாதம் 2ஆம் தேதி பஹ்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த கோல்தான் லயன்ஸ் குழு போட்ட கடைசி கோலாகும். இந்த ஆட்டத்தில் 3-1 என லயன்ஸ் குழு தோல்வியைத் தழுவியது. ஆனால், கடந்த வெள்ளிக் கிழமை மலேசியாவிற்கு எதிரான ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் சம நிலையில் முடிந்தது. இருப்பினும் கோல் போடுவதற் கான பல வாய்ப்புகளை அவர்கள் உருவாக்கியது ஊக்கமளிப்பதாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!