ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்த தென்னாப்பிரிக்கா

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி அமோக வெற்றி பெற்று உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி கேப்டவுனில் பகல்=இரவாக நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. அந்த அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. ரூசோ அபாரமாக விளையாடி தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 118 பந்துகளில் 122 ஓட்டங்களும் டுமினி 75 பந்துளில் 73 ஓட்டங்களும் மில்லர் 29 பந்துகளில் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

328 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வார்னர் அதிரடியாக விளை யாடினார். அவர் 88 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் சதத்தைத் தொட்டார். 85வது போட்டியில் விளையாடிய அவருக்கு இது ஒன்பதாவது சதமாகும்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை தென்னாப்பிரிக்க வீரர் டி காக் சாய்த்ததை அடுத்து அவரிடம் ஓடிச் சென்று கொண்டாட்டத்தில் இறங்குகிறார் சக வீரரான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் (வலது). தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய வீரர்களால் இறுதி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போனது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா