வெல்லும் முனைப்புடன் இந்தியா

தர்மசாலா: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து நாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது. அண்மையில் இவ்விரு அணி களுக்கும் இடையில் நடந்து முடிந்த மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அனைத்து ஆட்டங் களிலும் வெற்றி பெற்றது. மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி நியூசிலாந்து 'ஒயிட்வாஷ்' ஆனது. டெஸ்ட் தொடரை முழுமை யாகக் கைப்பற்றிய இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் 115 புள்ளி களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வாகை சூடினால் தரவரிசையில் முன்னேற வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா தற்போது 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றால் நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ஒருவேளை தொடரை நியூசிலாந்து வென்றால் அந்த அணி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தரவரிசையில் முன்னேற இத்தொடரிலும் அபார வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் இருக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவின் பந்தடிப்பாளர்கள் மட்டுமின்றி பந்துவீச்சாளர்களும் சக்கைப் போடு போட்டு எதிரணியைத் திணற வைத்தனர்.

அணித் தலைவர் விராத் கோஹ்லி, புஜாரா, முரளி விஜய் ஆகியோரின் அபாரப் பந்தடிப்பைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து தவித்தது. இது ஒரு புறம் இருக்க, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் அனுப்பிய பந்துகள் நியூசிலாந்தின் விக்கெட்டுகளை மளமளவெனச் சாய்த்தன. ஒருநாள் தொடரிலும் இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. டெஸ்ட் போட்டியில் தங்களுக்கு ஏற்பட்ட அவல நிலையைத் தவிர்க்க நியூசிலாந்து வியூகம் வகுக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கிடையே, காய்ச்சல் காரணமாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலாக விளையாடி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியைக் கைப்பற்றிய இந்திய வீரர்கள் நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரிலும் தங்கள் அபாரத் திறனை வெளிப்படுத்துவர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!