பெனால்டி வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு சிட்டி ஏமாற்றம்

மான்செஸ்டர்: கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக்கத் தவறிய மான்செஸ்டர் சிட்டி, எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் டி பிராய்ன எடுத்த பெனால்டியை எவர்ட்டனின் கோல்காப்பாளர் மார்ட்டின் ஸ்டெகலென்பர்க் தடுத்து நிறுத்தினார். இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலை யில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்திலும் கோல் போட சிட்டி எவ்வளவோ முயன்றும் எவர்ட்டனின் தற்காப்பு அரண் விட்டுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் எவர்ட்டனின் ரொமேலு லுக்காக்கு கோல் போட்டு சிட்டியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இதையடுத்து, சிட்டிக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்புக் கிட்டியது. ஆனால் சிட்டியின் நட்சத்திர வீரர் செர்கியோ அகுவேரோ எடுத்த இந்த பெனால்டியையும் எவர்ட்டன் கோல்காப்பாளர் முறியடித்தார். இருப்பினும், 72வது நிமிடத்தில் சிட்டி நொலிட்டோ மூலம் ஒருவழியாக ஆட்டத்தைச் சமன் செய்தது. மற்றோர் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் லெஸ்டர் சிட்டியை செல்சி 3-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. ஆட்டத்தின் 7வது நிமிடத் திலேயே செல்சியின் டியேகோ கோஸ்டா அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்