அர்ஜெண்டினாவைப் பிழிந்தெடுத்த இந்தியக் கபடி அணி

அகமதாபாத்: உலகக் கிண்ணக் கபடிப் போட்டியில் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா 74=20 எனும் புள்ளிக் கணக்கில் அர்ஜெண்டினா அணியைத் தோற்கடித்துள்ளது. சொந்த ரசிகர்களின் முன் விளையாடிய இந்தியா, ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்தி எதிரணியைத் திக்கு முக்காட வைத்தது. இரண்டு முறை மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை வென் றுள்ள இந்திய அணி, இம்முறை நடைபெறும் உலகக் கிண்ணத் தையும் ஏந்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. முதல் ஆட்டத்தில் தென்கொரி யாவை எதிர்கொண்ட இந்தியா யாரும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியைத் தழுவியது. அந்த ஆட்டத்தின்போது முன்னிலை வகித்துக்கொண்டி ருந்த இந்தியா, கடைசி நேரத்தில் புள்ளிகளைப் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

அதனைத் தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட இந்தியா, அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், அர்ஜெண்டினா வீரர்களைப் பந்தாடிய இந்தியா, 54 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணியில் அஜய் தாக்கூர் 14 புள்ளிகளும் ராகுல் சவுத்ரி 11 புள்ளிகளும் சுர்ஜீத் 6 புள்ளிகளும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி இந்தப் போட்டியில் அதன் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தம்மை மடக்கிப் பிடிக்க விரையும் அர்ஜெண்டினா வீரர்களிடமிருந்து துள்ளிக் குதித்துத் தப்பிக்கும் இந்திய வீரர். அர்ஜெண்டினா வீரர்கள் எவ்வளவு முயன்றும் அவர்கள் பிடியிலிருந்து இந்திய வீரர்கள் எளிதில் நழுவிச் சென்று புள்ளிகளைக் குவித்தனர். மறுமுனையில் இந்திய வீரர்களின் இரும்புப் பிடியில் அர்ஜெண்டினா வீரர்கள் சிக்கித் தவித்துத் தோல்வியைத் தழுவினர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லெஸ்டர் சிட்டியின் ஜேம்ஸ் மேடிசன் (நடுவில்) அனுப்பிய பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க முடியாமல் தவித்த ஆர்சனல் கோல்காப்பாளர், தற்காப்பு ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஆர்சனல் ஏமாற்றம்; அதிரடி காட்டிய லெஸ்டர்