லோதா குழு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான லோதா குழுவின் வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக் கப்பட்டது. அப்போது வாரியம் சார்பில் முன்னிலையான வழக்கறி ஞர் கபில்சிபல் வாதிடுகையில், "லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்ப தால் சில பரிந்துரைகளை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. எனவே எங்களுக்குக் கால அவகாசம் வேண்டும்," என்று தெரிவித்தார். லோதா குழு சார்பில் முன்னி லையான வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் இதற்கு மறுப்புத் தெரிவித்தார். "உச்ச நீதிமன்ற உத்தரவை வாரியம் மீறி வருகிறது. எனவே இடைக்கால நிர்வாகியை நியமித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார். இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!