வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாக்.

துபாய்: பாகிஸ்­தான் கிரிக்கெட் அணி முதல் இன்­னிங்­சில் 3 விக்­கெட் இழப்­புக்கு 579 ஓட்டங்கள் குவித்து வெற்றியை உறுதி செய்­தது. வெஸ்ட்­இண் டீஸ் அணி முதல் இன்­னிங்­சில் 357 ஓட்டங்கள் எடுத்­தது. வெஸ்ட்­இண்­டீஸ் 109 ஓவர்­களில் 289 ஓட்­டங்களில் ‘ஆல்­ அ­வுட்’ ஆனது. இதனால் பர­ப­ரப்­ பான இந்த டெஸ்­டில் பாகிஸ்­தான் 56 ஓட்டங்கள் வித்­தி­யா­சத்­தில் வென்றது. பகல்-இரவு டெஸ்­டில் வென்ற 2வது நாடு என்ற பெரு மையைப் பாகிஸ்­தான் பெற்றது. ஹோல்­டர் 40 ஓட்­டங்கள் எடுத்து ஆட்டம் இழக்­கா­மல் இருந்தார். முக­மது அமீர் 3 விக்­கெட்­டும், யாசிர்ஷா, நவாஸ் தலா 2 விக்­கெட்­டுகளும், வாகாப் ரியாஸ் 1 விக்­கெட்­டும் எடுத்­த­னர். இதன் மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொட­ரில் பாகிஸ்­தான் 1=0 என்ற கணக்­கில் முன்­னிலை­யில் உள்­ளது. 2ஆவது டெஸ்ட் வரு­கிற நாளை மறுநாள் அபு­தா­பி­யில் தொடங்­கு­கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்