கோல் போடாமல் ரசிகர்களை ஏமாற்றிய அணிகள்

லிவர்பூல்: பிரிமியர் லீக் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்­பார்த்துக் காத்துக் கொண்டிருக்கை­யில், அனைவரது எதிர்பார்ப்பையும் ஏமாற்றும் வகையில் எந்த அணியும் கோல் போடாமல் ஆட்­டம் 0=0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. நேற்று அதிகாலை லிவர்பூ­லில் உள்ள ஆன்ஃபீல்டு மைதா­னத்­தில் நடைபெற்ற இந்த பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூலும் மான்­செஸ்டர் யுனைடெட்டும் மோதின. முதலில் பரபரப்பாகவும் அடுத்து என்ன அதிசயம் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிரடித் தாக்குதல்களும் ரசிகர் களை பரவசப்படுத்தின. அவை ரசிகர்­களிடையே எண்­ணற்ற எதிர்­பார்ப்புகளை உண்டு பண்ணின. ஆனால் இறுதியில் கிடைத்தது ஏமாற்றமே.

இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி­யின் அபார ஆட்டம் கூடி யிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தை யும் கைதட்டுகளை­யும் பெறத் தவறவில்லை. இந்நிலையில் சம நிலை கண்ட அணிகளில் மான் செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி ஜோசே மொரின்யோ, எதிரணியின் நிர்வாகி யேகனைக் காட்டிலும் பூரிப்புடன் காணப் பட்டார். சோகத்துடன் காணப்பட்ட லிவர்­பூல் குழுவின் நிர்வாகி க்ளாப் கூறுகையில், “யுனைடெட்­டின் ஆட்டம் தமக்குத் திருப்தி­யளிக்கவில்லை. லிவர்பூல் இன்னும் சிறப்பாக விளையாடி­யிருக்கலாம். நாங்கள் என்னதான் புள்ளிகளைப் பெற்றாலும் அது வெற்றி பெற்ற­தைப்­ போன்ற உணர் வை எங்களுக்குக் கொடுக்க­­ வில்லை,” என்று கூறினார்.

லிவர்பூல் அணியின் எம்ரி கேன், கோர்ட்டினோ ஆகியோரின் அதிர­டித் தாக்குதல்களால் கோல் களாக மாறவிருந்த பந்துகளை ஒரே தாவில் அமுக்கிப் பிடித்து யுனெடெட் குழுவைத் தோல்வியில் இருந்து காப்பாற்றினார் அந்த அணியின் கோல் காப்பாளர் டேவிட் டி ஹேயா. மறுபாதி ஆட்டத்தில் நடந்த இந்த அதிசயத்திற்காக கோல் காப்பாளர் டேவிட் டி ஹேயாவை வெகுவாகப் பாராட்டினார் அக்குழுவின் நிர்வாகி மொரின்யோ.

இது யுனெடெட் குழுவுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை அந்தக் குழு நன்கு பயன்படுத்திக்கொண்டு லிவர் பூலின் வெற்றிக்குத் தடை போட் டது. ஐந்தாவது வெற்றிகரமான லீக் போட்டியில் வென்று புள்ளிகளின் மூலம் முன்னிலையில் உள்ள மான்செஸ்டர் சிட்டியுடன் கைகோத்­திருக்கலாம் லிவர்பூல். ஆனால் அது ஜோசே மொரின் யோவின் தற்காப்பு உத்திகளால் தகர்க்கப்பட்டு­விட்­டது. லிவர்பூல் அணி தன் தனித் திறமையை வெளிப்படுத்த முடியாமல் திணற வைத்துவிட்டது யுனைடெட்.

லிவர்பூல் வீரர்களின் அசுரத் தாக்குதலில் கோலாக இருந்த பந்தைப் பாய்ந்து பிடிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் கோல் காப்பாளர் டேவிட் டி ஹேயா. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

சுவிட்சர்லாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யர்கன் கிளோப். படம்: இபிஏ

13 Nov 2019

யர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியுடன் கைகுலுக்கும் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ரோகித்: எல்லா புகழும் பந்து வீச்சாளர்களுக்கே