கோல் போடாமல் ரசிகர்களை ஏமாற்றிய அணிகள்

லிவர்பூல்: பிரிமியர் லீக் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்- பார்த்துக் காத்துக் கொண்டிருக்கை- யில், அனைவரது எதிர்பார்ப்பையும் ஏமாற்றும் வகையில் எந்த அணியும் கோல் போடாமல் ஆட்- டம் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. நேற்று அதிகாலை லிவர்பூ லில் உள்ள ஆன்ஃபீல்டு மைதா னத்- தில் நடைபெற்ற இந்த பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூலும் மான்- செஸ்டர் யுனைடெட்டும் மோதின. முதலில் பரபரப்பாகவும் அடுத்து என்ன அதிசயம் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிரடித் தாக்குதல்களும் ரசிகர் களை பரவசப்படுத்தின. அவை ரசிகர் களிடையே எண் ணற்ற எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணின. ஆனால் இறுதியில் கிடைத்தது ஏமாற்றமே.

இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி யின் அபார ஆட்டம் கூடி யிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தை யும் கைதட்டுகளை யும் பெறத் தவறவில்லை. இந்நிலையில் சம நிலை கண்ட அணிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி ஜோசே மொரின்யோ, எதிரணியின் நிர்வாகி யேகனைக் காட்டிலும் பூரிப்புடன் காணப் பட்டார்.

சோகத்துடன் காணப்பட்ட லிவர் பூல் குழுவின் நிர்வாகி க்ளாப் கூறுகையில், "யுனைடெட்- டின் ஆட்டம் தமக்குத் திருப்தி- யளிக்கவில்லை. லிவர்பூல் இன்னும் சிறப்பாக விளையாடி- யிருக்கலாம். நாங்கள் என்னதான் புள்ளிகளைப் பெற்றாலும் அது வெற்றி பெற்ற தைப் போன்ற உணர் வை எங்களுக்குக் கொடுக்க வில்லை," என்று கூறினார். லிவர்பூல் அணியின் எம்ரி கேன், கோர்ட்டினோ ஆகியோரின் அதிர டித் தாக்குதல்களால் கோல் களாக மாறவிருந்த பந்துகளை ஒரே தாவில் அமுக்கிப் பிடித்து யுனெடெட் குழுவைத் தோல்வியில் இருந்து காப்பாற்றினார் அந்த அணியின் கோல் காப்பாளர் டேவிட் டி ஹேயா.

மறுபாதி ஆட்டத்தில் நடந்த இந்த அதிசயத்திற்காக கோல் காப்பாளர் டேவிட் டி ஹேயாவை வெகுவாகப் பாராட்டினார் அக்குழுவின் நிர்வாகி மொரின்யோ. இது யுனெடெட் குழுவுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை அந்தக் குழு நன்கு பயன்படுத்திக்கொண்டு லிவர் பூலின் வெற்றிக்குத் தடை போட் டது. ஐந்தாவது வெற்றிகரமான லீக் போட்டியில் வென்று புள்ளிகளின் மூலம் முன்னிலையில் உள்ள மான்செஸ்டர் சிட்டியுடன் கைகோத் திருக்கலாம் லிவர்பூல். ஆனால் அது ஜோசே மொரின் யோவின் தற்காப்பு உத்திகளால் தகர்க்கப்பட்டு விட் டது. லிவர்பூல் அணி தன் தனித் திறமையை வெளிப்படுத்த முடியாமல் திணற வைத்துவிட்டது யுனைடெட்.

லிவர்பூல் வீரர்களின் அசூரத் தாக்குதலில் கோலாக இருந்த பந்தைப் பாய்ந்து பிடிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் கோல் காப்பாளர்
டேவிட் டி ஹேயா. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!