கின்னஸ் சாதனை முயற்சியில் தமிழக கராத்தே வீரர்கள்

ஒக்கினாவா: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கராத்தே சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் ஒக்கினாவா தீவில் உலகம் முழுவதிலுமிருந்து கராத்தே வீரர்கள் பங்குபெறும் பயிற்சி கின்னஸ் சாதனை முயற்சியாக வருகிற 23ஆம் தேதி நடக்கிறது. இந்தச் சாதனை நிகழ்ச்சியில் ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஸ்வேதா, கார்த்திக் சுதர் ஷன், அபிஜித் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அணி கலந்து கொள்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்