இருந்த இடம் தெரியாமல் போன மான்செஸ்டர் சிட்டி

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் தமது முந்தைய குழுவான பார்சி லோனாவை நேற்று அதிகாலை எதிர்கொண்ட மான்செஸ்டர் சிட்டிக்கு அந்த அனுபவம் சிம்ம சொப்பனமாக விளங்கியது. பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸிக்கு ஏற்பட் டிருந்த காயம் சரியாகி அவர் முழு உடற்தகுதியுடன் விளையாட அந்த அணி சிட்டி அணியை இருக்கும் இடம் தெரியாமல் விரட்டியது. முதல் பாதி ஆட்டத்தில் ஓரளவு பார்சிலோனாவுக்கு ஈடு கொடுத்த சிட்டி அணி இரண்டாம் பாதி ஆட்டத்தில் தவறு மேல் தவறுகள் செய்து இறுதியில் 0-4 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வி யைத் தழுவியது.

இது போதாதென்று ஆட்டத் தின் 53ஆம் நிமிடத்தில் பந்தை எதிரணியைச் சேர்ந்த லுயிஸ் சுவாரெசிடம் தட்டிவிட்ட சிட்டி கோல்காப்பாளர் பிரோ வோ, சுவா ரெஸ் கோல் வலை நோக்கி அடித்த பந்தைச் சட்டென தமது கைகளால் தடுத்தார். இதனால், அவருக்குச் சிவப்பு அட்டை காண்பிக் கப்பட்டு ஆட்டத்தினின்றும் வெளியேற்றப்பட்டார். நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி ஆட்டத்தின் 17வது, 61வது, 69வது நிமிடங்களில் மூன்று கோல்கள் போட்டு பார்சிலோனா குழுவின் தலைசிறந்த வீரராக விளங்கினார்.

ஆட்டம் முடிய 17 நிமிடங்களே உள்ள நிலையில் பார்சிலோனாவின் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெரமி மேத்யூவும் இரண்டா வது மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டா லும் சிட்டி குழுவுக்கு எதிராக நான்கு கோல்கள் விழுந்த நிலை யில் இது அந்தக் குழுவுக்கு எந்த வித ஆறுதலையும் தரவில்லை. சிட்டி குழுவுக்கு மாற்று கோல்காப்பாளராக வந்த வில்லி கபலேரோ பார்சிலோனாவின் நெய்மாரின் பெனால்டி வாய்ப்பைத் தடுத்தபோதும் நெய்மார் ஆட்ட முடிவில் தமது பங்குக்கு பார்சி லோனாவின் இறுதி கோலை போட்டு அசத்தினார்.

பந்தைக் கையால் தடுத்ததற்காக பிராவோவுக்கு சிவப்பு அட்டை காண்பித்து ஆட்டத்தினின்று வெளியேற்றும் நடுவர். படங்கள்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை