தரவரிசையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்த லயன்ஸ்

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. தற்போது அது 171வது இடத்தில் உள்ளது. அண்மையில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டங்களில் வெற்றி பெறாததால் சிங்கப்பூர் குழுவுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 155வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் குழு 16 இடங்கள் இறங்கியுள்ளது.

இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 211 குழுக்கள் கொண்ட தரவரிசைப் பட்டியலில் 165வது இடத்தில் இருந்ததே சிங்கப்பூர் குழுவுக்கு ஏற்பட்டிருந்த ஆக மோசமான நிலையாக இருந்தது. இந்நிலையில், இந்திய காற்பந்துக் குழு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11 இடங்கள் ஏற்றம் கண்டு 137வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை