வெற்றிக்கு வித்திட்ட பொக்பா

மான்செஸ்டர்: துருக்கிய ஜாம்பவான் ஃபெனபாச்சேவுக்கு எதிரான யூரோப்பா லீக் காற்பந்து ஆட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனை டெட் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு யுனைடெட் குழுவின் நட்சத்திர வீரர் பால் பொக்பாவின் அபார ஆட்டம் முக்கிய காரண மாக அமைந்தது. அவர் போட்ட இரண்டு கோல்கள் யுனைடெட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஃபெனபாச் சேயின் பெனால்டி எல்லைக்குள் இருந்த யுனைடெட்டின் மாட்டா பந்தைத் தமது கட்டுக்குள் கொண்டு வர, பந்தை அவரிட மிருந்து பறிக்க விரைந்த ஃபென பாச்சே தற்காப்பு ஆட்டக்காரர் அவரை விழச் செய்தார். இந்தத் தப்பாட்டம் காரணமாகக் கிடைத்த பெனால்டியை கோலாக்கினார் பொக்பா.

யுனைடெட் ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் மூன்று நிமிடங்கள் கழித்து அக் குழுவுக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மார்ஷலின் கால்களிலிருந்து புறப்பட்டுச் சென்ற பந்து வலைக்குள் புகுந் தது. இடைவேளைக்குச் சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது பொக்பா தமது இரண்டாவது கோலை போட்டார். அவர் அனுப் பிய பந்து அழகாக வளைந்து சென்று வலையைத் தீண்டியது. இடைவேளையின்போது யுனை டெட் 3=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் யுனை டெட்டின் நான்காவது கோல் புகுந்தது. ரூனி அனுப்பிய பந்தை லிங்கார்ட் கோலாக்கினார். ஆட்டம் முடிய ஏழு நிமிடங்கள் இருந்தபோது ஃபெனபாச்சே வீரர் ராபின் வேன் பர்சி தமது குழுவுக்காக ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!