செல்சி- யுனைடெட் மோதல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி ஆட்டத்தில் செல்சியும் மான்செஸ்டர் யுனைடெட்டும் இன்றிரவு மோதுகின்றன. இந்த ஆட்டம் செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நடைபெற்ற ஆட்டங்களில் இரு குழுக்களும் வெற்றியைச் சுவைத்துள்ளன. பிரிமியர் லீக் ஆட்டத்தில் நடப்பு வெள்ளியாளர் லெஸ்டர் சிட்டியை செல்சி 3-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. மறுமுனையில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் துருக்கிய குழுவான ஃபெனபாச் சேயை யுனைடெட் 4=1 எனும் கோல் கணக்கில் புரட்டி எடுத்தது.

ஆகக் கடைசியாகக் களமிறங்கிய ஆட்டங்களில் இரு குழுக்களும் கோல் மழை பொழிந்திருப்பதால் இன்றைய ஆட்டத்தில் இருதரப்பு வீரர்களும் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் விளையாடும் சாத் தியம் அதிகம் உள்ளது. யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ இதற்கு முன் செல்சியின் நிர்வாகியாக முத்திரை பதித்தவர். செல்சி இதுவரை வென்றுள்ள ஐந்து லீக் பட்டங்களில் மூன்று பட்டங்கள் மொரின்யோவின் தலைமையின் கீழ் வெல்லப்பட்டவை. அதே போல செல்சியின் ஐந்து லீக் கிண்ணங்களில் மூன்று லீக் கிண்ணங்களுக்கு மொரின் யோவின் வியூகம்தான் காரணம்.

இந்நிலையில், செல்சியின் ‘செல்லப் பிள்ளை’ நிர்வாகியாக இருந்த மொரின்யோ இன்று எதிரணிக்குத் தலைமை தாங்கி ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளை யாட்டரங்கத்துக்குப் படை எடுக் கிறார். இன்றிரவு அவரது குழுவுக்கு எதிராகக் களமிறங்கும் செல்சி வீரர்களில் ஏறத்தாழ ஏழு பேர் 2014- 2015 பருவத்தில் அவரது தலைமையின்கீழ் பதக்கங்கள் வென்றவர்கள். இன்றிரவு நடைபெறும் ஆட்டம் உலகின் பிரபல காற்பந்து நிர்வாகி களில் ஒருவரான மொரின் யோவின் 779வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்