மலேசிய எஃப்1 போட்டி நிறுத்தப்படலாம்

கோலாலம்பூர்: விரைவு கார் பந்தயமான எஃப்1 போட்டி மலேசி யாவில் 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு நடக்காமல் போகலாம். போட்டியை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே போவதும் நுழைவுச் சீட்டு விற்பனை சரிந்துகொண்டே வருவதும், போட்டி நடைபெறும் மற்ற இடங்களிலிருந்து வரும் போட்டியுமே அதற்குக் காரணம் என்று செப்பாங் அனைத்துவலகத் தடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஸ்லான் ரசாலி கூறினார்.

போட்டியைத் தொலைக்காட்சி யில் பார்ப்போரின் எண்ணிக் கையும் சரிந்து வருகிறது. அதனால் எஃப்1 அதிகாரிகள் மலேசியப் போட்டியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இவ்வாரம் கூடவிருக்கின்றனர். போட்டியை நடத்த 2018ஆம் ஆண்டு வரை குத்தகை வழங்கப் பட்டுள்ளது. “இந்தப் போட்டியால் மலேசியா வுக்குப் பொருளியல் நன்மை கிட்டாவிட்டால் அதனைத் தொடர்ந்து நடத்துவதில் அர்த்த மில்லை,” என்றும் திரு ரசாலி கூறினார். 120,000 பேர் அமரக்கூடிய செப்பாங் அரங்கில் கடந்த மாதப் போட்டியின்போது 45,000 பார் வையாளர்கள் மட்டுமே திரண் டிருந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு