ரூனியின் மேன்யூ எதிர்காலம் கேள்விக்குறி

லண்டன்: இங்கிலாந்து வீரர் வெய்ன் ரூனியின் மேன்செஸ்டர் யுனைட்டெட் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த சில ஆட்டங்களாகவே ரூனி மாற்று ஆட்டக்காரராகவே களமிறக்கப்பட்டார். முன்பு அவ ரிடம் இருந்த வேகம் குறைந்து விட்டதே அதற்குக் காரணம். அவருக்குத் தொடர்ந்து விளை யாட வாய்ப்பு வழங்குவது சிரமம் என்றும் அவ்வாறு அவர் விரும்பினால் அவர் மேன்செஸ்டர் யுனைட்டெட்டை விட்டு வெளியேறு வது மட்டுமே வழி என்றும் நிர்வாகி மொரின்யோ கூறி யிருக்கிறார்.

முதல் 11 பேரில் ரூனிக்கு நிலையான இடம் தருவதற்குத் தன்னால் உத்தரவாதம் தரமுடியாது என்றும் மொரின்யோ கூறினார். ரூனியை விற்கும் எண்ணம் மொரின்யோவுக்கு இப்போதைக்கு இல்லை என்றாலும் ரூனியின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்று

ம் அவர் கூறினார். கடந்த நான்கு ஆட்டங்களிலும் ரூனி முதல் குழுவில் விளை யாடவில்லை. ஞாயிற்றுக்கிழமை செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் ரூனி விளையாடாததற்குத்‘தசைக் காயம்’ காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.

மேன்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர ஆட்டக்காரர் வெய்ன் ரூனியும் (இடம்), நிர்வாகி மொரின்யோவும். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி