ஹாக்கி: இந்தியா முதலிடம்

குவந்தான்: ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கி தொடரில் இந்திய அணி யாராலும் வீழ்த்த முடியாத அணியாகத் திகழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்திலும் 2-1 என மலேசியாவைத் தோற்கடித்த இந்தியா, 13 புள்ளிகளுடன் பட்டியலின் முதல்நிலையைப் பிடித்தது. தனது முந்தைய ஆட்டங்களில் ஜப்பான், பாகிஸ்தான், சீனாவை வென்ற இந்திய அணி, தென் கொரியாவிடம் மட்டும் 1-1 என சமநிலை கண்டது. நாளை இரவு 8.30 மணிக்கு நடக்க இருக்கும் அரையிறுதிப் போட்டி யில் பட்டியலின் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணியுடன் இந்திய அணி மோதவிருக்கிறது. இறுதிப் போட்டி நாளை மறுநாள் ஞாயிறு இரவு நடைபெறும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்