வெளியேறுகிறார் பென்னன்ட்

முன்னாள் ஆர்சனல், லிவர்பூல் காற்பந்து ஆட்டக்காரர் ஜெர்மைன் பென்னன்ட்டின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுடனான பயணம் இந்தப் பருவத்துடன் நிறைவுக்கு வருகிறது. அல்பிரெக்ஸ் நிகாட்டா குழு விற்கு எதிராக நாளை நடக்கும் சிங்கப்பூர் கிண்ண இறுதி ஆட் டமே தெம்பனிஸ் குழுவிற்காக 33 வயது பென்னன்ட்டின் கடைசிப் போட்டியாக இருக்கும்.

இவ்வாண்டு தொடக்கத்தில் ரோவர்சில் இணைந்த பென்னன்ட் உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தெம்பனிஸ் குழு ஆர்வமாக இருந்தபோதும் அவர் அதனை நிராகரித்துவிட்டதாக அக்குழுவின் தலைவர் கிருஷ்ணா ராமச்சந்திரா தெரிவித்தார். இதையடுத்து, 21 வயதுக்குட் பட்ட இங்கிலாந்துக் குழுவின் முன்னாள் வீரரான பென்னன்ட்டை ஒப்பந்தம் செய்ய சில இங்கி லாந்துக் குழுக்களும் தென்கிழக்காசியக் குழுக்கள் சிலவும் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!