கிரிஸ்டல் பேலசை பந்தாடிய லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நேற்று அதிகாலை கிரிஸ்டல் பேலசை எதிர்கொண்ட லிவர்பூல் சரமாரி யாக கோல் மழை பொழிந்து எதிரணியைப் பந்தாடியது. எம்ரே சான், டெஜான் லாவ்ரன், ஜோயெல் மாட்டிப், ராபர்ட்டோ ஃபெர்மினோ என ஒருவர் மாற்றி ஒருவர் கோல் போட, கிரிஸ்டல் பேலஸ் அணி சமாளிக்க முடி யாமல் திக்குமுக்காடியது. ஆனால், தாக்குதல் ஆட்டத் தில் பேலசை திணறடித்த லிவர்பூல் தற்காப்பு ஆட்டத்தில் சோடை போனது. இதன் காரணமாக, இரு முறை கிரிஸ்டல் பேலஸ் அணியின் ஜேம்ஸ் மெக்கார்த்தர் தலையால் முட்டி தமது அணிக்கு இரு கோல்கள் போட ஆட்டம் 4-2 என லிவர்பூலுக்குச் சாதகமாக முடிந்தது.

விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியி லேயே ஐந்து கோல்கள் விழ, பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் முதல் பாதியில் மிக அதிக கோல் கள் விழுந்த பெருமையை இந்த ஆட்டம் தட்டிச் சென்றது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த லிவர்பூலின் மத்திய திடல் வீரரான ஃபிலிப்பே கோட்டின்யோ லிவர்பூ லின் இடைவிடாத் தாக்குதலின் நாயகனாக விளங்கினார்.

இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்தாட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை கிரிஸ்டல் பேலசை வெளுத்து வாங்கியது லிவர்பூல். அந்த அணியின் நான்காவது கோலைப் போட்டு பேலசை 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்ட லிவர்பூலின் நான்காவது கோலைப் போட்டபின் சக வீரர்களான மானே (இடக்கோடியில் இருப்பவர்), கோட்டின்யோ ஆகியோருடன் வெற்றிக் களிப்பில் ஃபெர்மினோ (வலக்கோடியில் மேல் சீருடையை கழற்றிய நிலையில்). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்