செயற்கைகால் கழன்ற பின்னும் பந்தை எடுக்க ஓடிய வீரர்

துபாய்: உடற்குறையுள்ளோருக் கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் இங்கிலாந்து வீரர் லியம் தாமஸ் தன்னுடைய செயற்கைகால் கழன்று விழுந்த பின்னும் பந்தை எடுக்க ஓடிய காணொளி காட்சி இணையத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. துபாயில் உடற்குறையுள்ளோ ருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் கடந்த வாரம் நடந்த இறுதிப் போட்டியில் இங்கி லாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின.

பாகிஸ்தான் வீரர் அடித்த பந்து பவுண்டரி எல்லையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் களத்தடுப்பில் இருந்த இங்கி லாந்து வீரர் லியம் தாமஸ் பந்தைத் தடுத்தபோது அவரின் செயற்கைகால் கழன்று கீழே விழுந்தது.

அதை அவர் பொருட்படுத்தா மல் ஒரு காலில் நொண்டிக் கொண்டே சென்று அந்தப் பந்தை எடுத்து விக்கெட் காப் பாளரை நோக்கி வீசினார். “எழுந்து நிற்க முயன்றபோது செயற்கை கால் கழன்று விழுந் ததை உணர்தேன். “என்ன செய்வதென்று தெரிய வில்லை. காலை எடுக்க ஓடு வதைவிட பந்தை எடுத்து வீச முடிவு செய்தேன்,” என்றார் தாமஸ். துபாயின் அதிக வெப்பம் காரணமாக செயற்கைகால் விரிவடைந்திருக்கலாம் என்று எண்ணுவதாக அவர் சொன்னார். ஆனால், இப்போட்டியில் இங்கிலாந்து மூன்று விக்கெட்டு கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.

பந்து பவுண்டரி எல்லையைத் தொடாமல் தடுக்க முயன்றபோது லியம் தாமசின் செயற்கை கால் கழன்றபோதும் ஒற்றைக்காலில் ஓடி களத்தடுப்பில் ஈடுபட்டார். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஃப்‌ரீ கிக்’ வாய்ப்பு மூலம் கோலை நோக்கி பந்தை அனுப்பும் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை

ஸ்பெயினின் சாவ்ல் நிகேஸுடன் பொருதும் ருமேனியாவின் ஃபுளோரினல் கோமன் (மஞ்சள் நிற சீருடையில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

கோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து