மலேசியாவை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி

செங்காங்கில் உள்ள ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் ஹாக்கி வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தில் மலேசியாவை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கநடித்து புள்ளிப் பட்டியிலில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. பூனம் ராணி அபாரமாக ஃபீல்டு கோல் போட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் மலேசிய அணி இறங்கியது.

ஆனால் மலேசிய வீராங்கனைகளின் கோல் முயற்சிகளை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர். ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் இந்தியாவின் இரண்டாவது கோலை தீபிகா போட்டார். இறுதிவரை போராடியும் மலேசியாவால் கோல் போட முடியவில்லை. புள்ளிப் பட்டியலில் தென்கொரியா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் ஜப்பான் நான்காவது இடத்திலும் மலேசிய ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி சீனாவுடன் நாளை மோதுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்