மேன்சிட்டி தாக்குதலில் உறைந்தது பார்சிலோனா

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பானிய ஜாம்பவானான பார்சிலோனாவை 3-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி தோற் கடித்துள்ளது. இந்த ஆட்டம் நேற்று அதிகாலை சிட்டியின் எட்டிஹாட் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது. ஆட்டத்தின் முதல் கோலை பார்சிலோனா போட்டும் துவண்டு விடாமல் விளையாடிய சிட்டி வெற்றியைச் சுவைத்தது. சிட்டியின் இல்கே குவேன் டொகன் இரண்டு கோல்களும் கெவின் டி பிராய்ன ஒரு கோலும் போட்டு வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த ஆட்டத்திற்கு முன்பு தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த பார்சிலோனாவின் வெற்றிப் பயணத்துக்கு சிட்டி வேகத் தடை போட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்சிலோ னாவின் விளையாட்டரங்கத்தில் 4=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்ததற்கு சிட்டி பழி தீர்த்துக்கொண்டது. நான்கு ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சிட்டி ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளது. சிட்டி யைவிட இரண்டு புள்ளிகள் கூடுதலாகக் கொண்டிருக்கும் பார்சிலோனா 'சி' பிரிவில் தொடர்ந்து முன்னிலை வகிக் கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் காலிறுதிச் சுற்றுக்கு முந்திய சுற்றுக்கு 13வது முறையாக பார்சிலோனா தகுதி பெற்றிருக்கும். ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. மெஸ்ஸியின் இந்த 90வது சாம்பியன்ஸ் லீக் கோல் சிட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

சிட்டியின் மூன்றாவது கோலைப் போடும் இல்கே குவேன்டொகன் (வலமிருந்து இரண்டாவது). பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பார்சிலோனா கோல்காப்பாளர் (இடக்கோடி) தற்காப்பு ஆட்டக்காரர் (நடுவில்) ஆகியோரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!