வெம்பிளியில் ஸ்பர்ஸ் தோல்வி

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனியின் பயர் லெவகுசன் தோற்கடித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை லெவ குசன் அணி வலுப்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் லெவகுசனின் சுலோவேனிய நட்சத்திரம் கெவின் கெம்பல் போட்ட கோல் இங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற வெம்பிளி விளையாட்டரங்கத்தில் கூடியி ருந்த ஸ்பர்ஸ் ரசிகர்களை ஏமாற்ற மடைய செய்தது.

லெவகுசனின் கோல் முயற்சியைத் தடுக்க பாயும் ஸ்பர்ஸ் கோல்காப்பாளர் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்