யூரோப்பா லீக்: மான்செஸ்டர் யுனைடெட் மந்தமான ஆட்டம்

இஸ்தான்புல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கடந்த நான்கு ஆட்டங்களாக வெற்றியை அறியாது தடுமாறி வரும் மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு யூரோப்பா லீக்கின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதும் கேள்விக்குறியாகி உள்ளது. சொந்த ஓல்ட் டிராஃபோர்ட் விளையாட்டரங்கில் துருக்கியின் ஃபெனர்பாச்சே குழுவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த மேன்யூ, நேற்று அதிகாலை இஸ்தான்புல்லில் நடந்த ஆட்டத் தில் அக்குழுவிடம் 2-1 என்ற கணக்கில் வீழ்ந்தது. ஆட்டத்தின் இரண்டாம் நிமி டத்திலேயே கோல் புகுத்தி மேன்யூ விற்கு அதிர்ச்சி கொடுத்தார் ஃபெனர்பாச்சேவின் மூசா சோ. பின்னர் 59வது நிமிடத்தில் ஜெரமைன் லென்ஸ் கோலடிக்க, ஃபெனர்பாச்சேவின் முன்னிலை இரட்டிப்பானது.

ஃபெனர்பாச்சே ஆட்டக்காரர் மார்ட்டின் ஸ்கெர்ட்டெல் (இடது), கோல்காப்பாளர் வோல்க்கன் டெமிரெல் (வலது) ஆகியோருடன் பந்துக்குப் போராடும் மேன்யூவின் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!