வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

பெர்த்: டூமினி, எல்கர் அடித்த சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென்னாப் பிரிக்கா வலுவான நிலையில் உள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் நான்கு விக்கெட் டுகள் எஞ்சியிருக்க 388 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா இருக்கிறது. தனது முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் அபாரப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 242 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை அடுத்து, பந்தடித்த ஆஸ்தி ரேலிய அணி 244 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் வெறும் இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தென் னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. நேற்று முன்தினம் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டூமினி 34 ஓட்டங்களு டனும் எல்கர் 46 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!