மான்செஸ்டர் சிட்டி வெற்றியைத் தடுத்த மிடல்ஸ்பரோ

மான்செஸ்டர் : இங் கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசையில் இதுநாள் வரை பெற்றிருந்த முதல் இடத்தை மான்செஸ்டர் சிட்டி குழு இழந்துள்ளது. நேற்று முன்தினம் மிடல்ஸ்பரோ குழுவை எதிர் கொண்ட அது அகுவேரோ போட்ட ஒரு கோலுடன் சுணக் கம் அடையவே, சற்றும் சளைக் காமல் கிடைத்த வாய்ப்புகளை எப்படியும் கோலாக்கிவிட வேண்டும் என்ற வெறியுடன் விளையாடிய போரோ குழுவுக்கு கூடுதல் நேரத்தில் மார்ட்டன் டி ரூன் கோல் போட்டார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் 14ஆம் இடத்துக்கு முன்னேறி யது போரோ குழு.

ஒரு கோல் போட்டதும் மந்தப் போக்குடன் விளையாட ஆரம்பித்து கிடைத்த வாய்ப்பு களைச் சரிவரப் பயன்படுத்தாத மான்செஸ்டர் சிட்டி குழுவை மிடல்ஸ்பரோ குழு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத் தில் பழி தீர்த்துக்கொண்டது. ஆட்டம் கிட்டத்தட்ட முடியப்போகும் தருணத்தில் மிடல்ஸ்பரோவின் மார்ட்டன் டி ரூன் தமது அணியின் சார்பாக கோல் போட சொந்த மைதானத் தில் இதுவரை மூன்று ஆட்டங் களில் ஒன்றில்கூட வெற்றி அடையவில்லை என்ற நிலை சிட்டி குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!