முதலிடத்துக்கு முன்னேறிய செல்சி

ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் எவர்ட்டனை நேற்று அதிகாலை மோதிய செல்சி அந்தக் குழுவைத் தனது எல்லைக்குள் ளேயே முடக்கியதுடன் அலை அலையாக தாக்குதல் களை மேற்கொண்டு இறுதியில் 5-0 என்ற கோல் எண்ணிக் கையில் வெற்றி கொண்டது. இதைத் தொடர்ந்து பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் செல்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதில் செல்சியின் பெல்ஜிய நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் இரண்டு கோல்கள் அசத் தினார். இதுபோல் மற்ற செல்சி வீரர்களான மார்க்கஸ் அலோன்சோ, டியேகோ கோஸ்டா, பெட்ரோ போன்றவர் களும் தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு கோல் போட்டு எவர்ட்டன் குழுவை இப்படி அப்படி அசையவிடாமல் செய் தனர். இந்த ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவினர் திடலில் தங்கள் பகுதியை விட்டு அகல முடி யாமல் தவித்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பந்தை எடுத்து இரண்டு எவர்ட்டன் வீரர்களை அனாயாசமாக சமாளிக்கும் செல்சியின் ஆட்ட நாயகன் ஈடன் ஹசார்ட். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!