ரியாலை எட்டிப் பிடிக்கும் பார்சிலோனா

ஸ்பானிய லா லீகா காற்பந்து ஆட்டத்தில் மோதிய செவியா குழுவை 2-1 என வெற்றி கொண்டது பார்சிலோனா. 15வது நிமிடத்தில் கோல் போட்டு தனது குழுவை முன் னிலைப்படுத்தினார் செவியா வின் விடோலோ. அதற்குப் பதிலாக 43வது நிமிடத்தில் மெஸ்சி போட்ட கோலால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. அதன்பிறகு 61வது நிமிடத் தில் மெஸ்சி கொடுத்த பந்தை சுவாரெஸ் கோலாக மாற்ற 2=1 என பார்சிலோனா வெற்றி பெற்றது.

செவியாவின் கோல் காப்பாளர் செர்ஜியோ ரிகோ, இவான் ரக்டிக், மெஸ்சி ஆகிய இருவரின் கோல் போடும் முயற் சியை முறியடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நெய்மார், மெஸ்சி, சுவாரெஸ் உட்பட இரு அணி வீரர்களையும் சேர்த்து 10 வீரர்களுக்கு தப்பாட்டம் காரணமாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள பார்சிலோனா 25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்கள் ரியால் மட்ரிட்டை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளனர்.

ஸ்பானிய லா லீகா ஆட்டத்தின்போது பந்தைத் தட்டிப் பறிக்கும் முயற்சியில் பார்சிலோனாவின் மெஸ்சியும் செவியாவின் விடோலாவும். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!