தென் ஆப்பிரிக்கா வெற்றி

பெர்த்: முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவைப் பணிய வைத்தது தென் ஆப்பிரிக்கா. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 242 ஓட்டங்களும் ஆஸ்திரேலியா 244 ஓட்டங்களும் எடுத்தன. 2 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 540 ஓட்டங்கள் குவித்து போட் டியை முடித்துக் கொண்டது. வெற்றி பெற 539 ஓட்டங்கள் என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

வெற்றிக்கு 370 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 6 விக்கெட்டுகளுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடியது ஆஸ்திரேலியா. எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை யில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தொடர்ந்தது. ஒரு பக்கம் நம்பிக்கையுடன் உஸ்மான் கவாஜா விளையாட, மறுமுனையில் விளையாடிய மிட்செல் மார்ஷை 26 ஓட்டத்தில் வெளியேற்றினார் ரபாடா. மறுமுனையில் விளையாடிய உஸ்மான் கவாஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டுமினி பந்தில் 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டார்க்கை ரபாடா வீழ்த்தினார். இதன்மூலம் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியைப் பெற்றுத் தந்த ரபாடாவைப் பாராட்டும் அணித்தலைவர் டு பிளஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!