கிரிக்கெட் தொடர்: மிகுந்த நம்பிக்கையில் இந்திய அணி

ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற் காக இந்தியா வந்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. விராத் கோஹ்லி தலைமையி லான இந்திய அணி அண்மை யில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. தொடரை வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணி 2012ஆம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 1-2 என டெஸ்ட் தொடரில் தோற்றது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா அந்தத் தோல்வியை சரிசெய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா தோற்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ஆரம்பித்து வைக்கப்போகும் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானம். படம்: இந்திய தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!