இன்று கம்போடியாவுடன் சிங்கப்பூர் சிங்கங்கள் பலப்பரிட்சை

சிங்கப்பூர் காற்பந்துக் குழு கம்போடியாவுடன் இன்று ஆடும் நட்புமுறை ஆட்டத்தில் பெறும் வெற்றி தங்கள் குழுவிற்குப் புத்துணர்வைத் தரும் என நம்புகிறார் குழுவின் துணைத் தலைவர் ஹரிஸ் ஹருண். ஐந்து மாதங்களுக்கு முன்பு நோம் பென்னில் கம்போடியா காற்பந்துக் குழுவிடம் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்ந்து நாடு திரும்பியது சிங்கப்பூர் காற்பந்துக் குழு. அந்தத் தோல்விக்குப் பழி தீர்க்கும் விதமா இன்றைய ஆட்டத்தை சிங்கப்பூர் குழு பயன்படுத்திக்கொள்ள விரும்பு கிறது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு கம்போடியாவிடம் கண்ட தோல்வி அது. எனினும் அப்போது அந்த நட்புமுறை ஆட்டத்தில் ஆட்டக்காரர்களின் திறன்களை அறிவதற்காக பல புதிய ஆட்டக்காரர்களை பல்வேறு பொறுப்புகளில் ஆட வைத்திருந் தார் சிங்கப்பூர் குழுவிற்குப் புதிதாகப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பேற்றிருந்த திரு வீ. சுந்தரமூர்த்தி.

நேற்று முன் தினம் பயிற்சியின்போது சிங்கப்பூர் ஆட்டக்காரகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஃப்‌ரீ கிக்’ வாய்ப்பு மூலம் கோலை நோக்கி பந்தை அனுப்பும் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை

ஸ்பெயினின் சாவ்ல் நிகேஸுடன் பொருதும் ருமேனியாவின் ஃபுளோரினல் கோமன் (மஞ்சள் நிற சீருடையில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

கோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து