ஸ்காட்லாந்தை முட்டி, மோதிய இங்கிலாந்து காற்பந்துக் குழு

லண்டன்: காற்பந்து உலகில் ஜென்மப் பகை வர்களான இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் நேற்று உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று போட்டியில் சந்தித்துகொண்டன. இதில் ஸ்காட்லாந்து அணியை முட்டி, மோதி ஆவேசத்துடன் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராக மூன்று கோல்களை தலையால் முட்டிப் போட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்துடன் காற்பந்துப் போட்டி என்றாலே உடலையும் மனதையும் முறுக்கி விட்டுக் கொண்டு விளையாடிய காலமெல் லாம் மலையேறிவிட்டது என்றும் தற்போதைய விளையாட் டாளர்களுக்கு அந்த அளவுக்கு உடல், மன உறுதி இல்லை என்று முன்னாள் தற்காப்பு வீரர் டெர்ரி புச்சர் அண்மையில் இங்கிலாந்து வீரர்களை சாடியிருந்ததது இங்கு நினைவுகூரத்தக்கது.

இங்கிலாந்தின் கேரி கேஹில் தலையால் முட்டிய பந்து ஸ்காட்லாந்து கோல்காப்பாளர் கைகளைக் கடந்து சென்று வலையை முத்தமிட்டது. இதுவே இங்லாந்தின் மூன்றாவது கோல். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!