கோஹ்லி நிதானம்; ஆட்டம் சமநிலை

ராஜ்கோட்: கோஹ்லியின் நிதான மான ஆட்டத்தால் இந்தியா= இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளை யாடியது.

முதல் இன்னிங்சில் இங்கி லாந்து 537 ஓட்டங்களும் இந்தியா 488 ஓட்டங்களும் எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று கடைசி, ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கி லாந்து அணியின் குக், ஹமீது ஜோடி நிலையான ஆட்டத்தைத் தொடர்ந்தது.

180 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், மிஸ்ரா பந்தில் ஹமீது 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த ஜோ ரூட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த குக், டெஸ்ட் அரங்கில் 30வது சதம் அடித்தார். இவர் அஸ்வின் பந்தில் 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் போட்டியில் தனது முப்பதாவது சதத்தைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி வீரர் குக்கிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!