எஃப்1: ரோஸ்பர்க்கை நெருங்கும் ஹேமில்டன்

சாவ் பாவ்லோ: பிரேசிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் மெர்சடிஸ் அணியின் லூயிஸ் ஹேமில்டன் வாகை சூடி உள்ளார். சக வீரர் நிக்கோ ரோஸ்பர்க் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ரோஸ்பர்க்கை ஹேமில்டன் நெருங்கி உள்ளார். தற்போது ரோஸ்பர்க் வெறும் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், இதனால் எஃப்1 பந்தயத்தின் மாபெரும் வெற்றியாளர் அபு தாபியில் நடைபெற இருக்கும் கடைசி பந்தயத்தில் நிர்ணயிக் கப்படுவார்.

இதுவரை ஹேமில்டனும் ரோஸ்பர்க்கும் தலா ஒன்பது பந்தயங்களை வென்றுள்ளனர். அபு தாபியில் ஏற்படும் முடிவைப் பொறுத்தே மகுடம் சூடும் வீரர் யார் என்பது உறுதியாகும். தகுதிச் சுற்றில் முதலிடத்தில் வந்த ஹேமில்டன் நேற்று முன்தினம் நடைபெற்ற பந்தயத்தை முன்வரிசையில் இருந்து ஆரம்பித்து வைத்தார். கடைசி வரை யாரும் தம்மை முந்திச் செல்லாதபடி பார்த்துக் கொண்ட ஹேமில்டன் வெற் றியைச் சுவைத்தார்.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் லூயிஸ் ஹேமில்டன். படம்: ராய்ட்டரஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!