லாட்வியாவைப் புரட்டி எடுத்த ரொனால்டோ

ஃபாரோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் 4-1 எனும் கோல் கணக்கில் லாட்வியாவைத் தோற்கடித்து உள்ளது. போர்ச்சுகலின் அபார வெற் றிக்கு அதன் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வித்திட்டார். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் அவர் போர்ச்சுகலின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். லாட்விய ஆட்டக்காரர் சொந்த பெனால்டி எல்லையில் தப்பாட்டம் புரிந்ததால் போர்ச்சுகலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இதை ரொனால்டோ கோலாக் கினார். இடைவேளையின்போது போர்ச்சுகல் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி போர்ச்சுகலுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரொனால்டோ அனுப்பிய பந்து இம்முறை கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை