இந்தியா அபார வெற்றி

மொகாலி: இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் விளைவாக இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்று இந்தியா முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் முடிவதற்கு இன்னும் ஒருநாள் எஞ்சியிருக் கையில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் இங்கி லாந்து அணி 283 ஓட்டங்கள் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 417 ஓட்டங்களைக் குவித்தது. 134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன் னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை இந்திய பந்துவீச்சாளர்கள் திக்கு முக்காட வைத்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர் அனுப்பிய பந்தை பறக்கவிடும் இந்திய பந்தடிப்பாளர் பார்தீல் பட்டேல் (வலது). பார்தீவ் பட்டேல் 67 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா