முன்னாள் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் பேரி பென்னெல் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள்

லண்டன்: மாணவப் பருவத்தில் காற்பந்து விளையாட்டைக் கற்றுக் கொண்டு காற்பந்து உலகில் காலடி பதிக்க வந்த சிறார்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக் கும் முன்னாள் காற்பந்து விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பேரி பென்னெல் லண்ட னுக்கு அருகேயுள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த திங்கட்கிழமை சுயநினைவின்றி காணப்பட்டார். 62 வயது பேரி பென்னெல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

அவரிடம் காற்பந்துப் பயிற்சி- பெற்ற முன்னாள் காற்பந்தாட்ட வீரர்கள் பலர், அவர் மீது அளித்த அடுக்கடுக்கான பாலியல் புகார்- களையடுத்து பென்னெல் தலை மறை வானார். இதுவரையிலும் ஐந்து காவல் நிலையங்களில் அவர் மீது பாலியல் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சிறார்களிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து அவர் மீது காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!